25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


(பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

(பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. 

  பாகிஸ்தானில் ஐ.சி. சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப்.19-மார்ச் 9) நடக்க உள்ளது. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் 'டாப்-8' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன. இதில் வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளை சந்திக்க உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் வழியாக நடந்தது. இந்தியா - பாக்., மோதலுக்கு மவுசு. 

இதில்இந்தியா, பாகிஸ்தான்மோதலுக்கானடிக்கெட்விற்பனைதுவங்கியசிலநிமிடத்தில்விற்றுத்தீர்ந்தன.  25,000 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்க, 1,50,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. பிளாட்டினம் டிக்கெட் ரூ. 48,000, கிராண்ட் பிரிவு டிக்கெட் ஒன்று ரூ.1.8 லட்சம் என விற்பனை ஆனது. தவிர, இந்தியா-வங்க தேசம், இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News